santa

|

Love

என் முதல் காதல்




என் பள்ளி காலத்தில்

வந்தது முதல் காதல்

அவளின் ஒரு நிமிட பார்வைக்கு

அடிமையாகி போனேன்

என் முகம் பார்த்து பின் முதுகு

துளைத்துப்போனது உன் பார்வை

ஈட்டியோ என்று இருந்தேன்

இல்லை அது நங்கூரம் என்று

என் நெஞ்கில் பாய்ச்சி விட்டு போனாள்

அடுத்த ஆண்டு பள்ளித்திறப்பில்

ஆவலோடு எதிர் பார்த்தேன் உன்னை

ம்ம் நேற்று வரை வரவில்லை நீ

இருபது வருடம் போனபின்பு

கண்டேன் உன்னை

உன் பிள்ளைகளுடன்

எங்கே அந்த கண்கள்

எங்கோ வெறித்த பார்வையில்

எத்தனையோ சோகங்கள்

உன் கண்கள் கண்டு

கலங்கின என் கண்கள்

இறைவா இவள் கண்களில் உயிர் கொடு.

இவள் வாழ்வில் ஒளி கொடு

என் கனவே நீதான்..!



கனவு காண யாரும்
உறங்கப் போவதில்லை

நான் மட்டும்தான்
பகல் கனவு கண்டு
கொண்டு இருக்கிறேன்
நான் தூங்குவதாக

நீ
என்னை மட்டுமல்ல
என் உறக்கத்தையும்
சேர்த்துத்தான்
கலைத்துவிட்டாய்

மறுபடி நான்
உன்னை சந்திக்க
நேர்ந்தால்

என் உறக்கத்தையாவது
கெஞ்சிக் கேப்பேன்

மறுபடி நான்
தூங்கிப்போனால்

என் கனவில் உன்னையே
கெஞ்சி கேப்பேன்

அன்பானவளே..!




எறும்பு ஊர கல்லும்
தேயுமா என்பது தெரியாது
உன் மனக்கல் மீது யார்
ஊர்ந்தாலும்

அவர்கள்தான் தேய்வார்கள்
என்பது மட்டும் தெரியும்

*

என் கவிதைகளின் எழுத்துப்
பிழைகளை நீ சரி செய்வதைவிட
மிக அழகு உன் உடையை நீ
சரி செய்வது

*

நீ
ஆசைபட்டபொருட்கள்
எல்லாவற்றையும்
வாங்கி பத்திரமாய்
வைத்திருக்கிறேன்

பத்திரப் படுத்தியதற்காகவாவது
என் மேல் உனக்கு ஆசை
வந்துவிடும் என்ற நம்பிக்கையில்

*

குழந்தையை தூக்கி கொஞ்சுகிறாய்
குழந்தையோ உன்னைக் கொஞ்சுகிறது
குழந்தை நீ தூக்கியதற்காய்

*

பூ
செடியை
சுற்றுமா என்ன..?

நீ
துளசிச் செடியை
சுற்றும்போது

என்னை நானே
கிள்ளிப் பார்க்கிறேன்